• The Central Bank of Sri Lanka Publishes the Market Operations Report – June 2026

    இலங்கை மத்திய வங்கி அதன் பிந்திய சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கையினை 2026 யூலை 31 அன்று வெளியிட்டது. நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த செலாவணி வீத வீச்சினால் ஆதரவளிக்கப்படும் நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பினுள் நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலினை அனுசரித்து மத்திய வங்கியினால் மேற்கொண்ட நாணய மற்றும் வெளிநாட்டுச் செலாவணித் தொழிற்பாடுகள் பற்றிய ஆர்வலர் புரிந்துகொள்ளலை மேம்படுத்துவதனை சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கை நோக்காகக் கொள்கின்றது.

  • CCPI-based headline inflation accelerated in July 2026

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை  (கொநுவிசு, 2021=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2026 யூனில் 6.8 சதவீதத்திலிருந்து 2026 யூலையில் 7.3 சதவீதமாக மேலும் அதிகரித்து உணவல்லா வகையின் வீட்டு வாடகைகளில் சீராக்கத்தையும் உணவுப் பணவீக்கத்தில் தளத்தாக்கத்தினையும் முதன்மையாகப் பிரதிபலித்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு) 2026 யூனின் 3.6 சதவீதத்திலிருந்து 2026 யூலையில் 6.3 சதவீதமாக அதிகரித்து முதன்மைப் பணவீக்கத்தின் அதிகரிப்பிற்குப் பிரதானமாகப் பங்களித்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு) 8.4 சதவீதத்திலிருந்து 2026 யூலையில் 7.8 சதவீதமாகக் குறைவடைந்தது.

  • External Sector Performance - June 2026

    வெளிநாட்டுத் துறையானது மத்திய கிழக்கின் அபிவிருத்திகளின் தாக்கத்தினை தொடர்ச்சியாக பிரதிபலித்ததுடன், மாதாந்த நடைமுறைக் கணக்கானது 2026 யூனில் பற்றாக்குறையொன்றினைப் பதிவுசெய்தது.

  • Sri Lanka PMI - Construction expanded in June 2026

    கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு, கட்டடவாக்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவடைதலை எடுத்துக்காட்டி, 2026 யூனில் 60.0ஆக அதிகரித்தது. முன்னைய மாதங்களில் வழங்கப்பட்ட கட்டடவாக்க கருத்திட்டங்களின் முன்னெடுக்கப்படுகின்ற நிறைவேற்றல்கள் இவ்வதிகரிப்பிற்கு காரணமாகவிருந்தன என பல பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

  • The Central Bank of Sri Lanka keeps the Overnight Policy Rate (OPR) unchanged

    நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், ஓரிரவு கொள்கை வீதத்தினை 8.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்கள் ஆகிய இரண்டிலும் பரிணமிக்கின்ற நிலைமைகள் மற்றும் தோற்றப்பாடு என்பவற்றினைக் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது.

  • Administrative Penalties imposed by the Financial Intelligence Unit on Reporting Institutions from October 2025 to March 2026

    2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு, நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் பிரகாரம், நிறுவனங்களின் தொடர்புடைய இணங்கியொழுகாமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றினைப் பரிசீலனையிற்கொண்டு தண்டப்பணங்கள் விதித்துரைக்கப்படலாம். 

  • SL Purchasing Managers’ Index (PMI) – June 2026

    கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2026 யூனில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துகாட்டுகின்றன.

    தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2026 யூனில் 53.0 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. இது முன்னைய மாதத்தை விட மெதுவான வேகத்திலேனும் தயாரிப்பு நடவடிக்கைளில் தொடர்ச்சியான விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றது.

  • Extension of the Suspension of Business of Perpetual Treasuries Limited

    இலங்கை மத்திய வங்கியானது பதிவுசெய்யப்பட்ட பங்குத்தொகுதி மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின் பிரகாரம் செயற்பட்டு, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில், 2026 யூலை 05ஆம் திகதி பி.ப 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டுநடாத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.    

  • Extension of the Term of the Administrator Appointed to Nation Lanka Finance PLC under the Banking (Special Provisions) Act, No. 17 of 2023

    2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சியிற்கு நியமிக்கப்பட்ட நிருவாகியான திரு. பி. டபிள்யு. டி. என். ஆர். ரொட்ரிகோ என்பவரின் பதவிக்காலத்தை இலங்கை மத்திய வங்கி நீடித்துள்ளது.

  • Nation Lanka Finance PLC - Cancellation of Licence under the Banking (Special Provisions) Act, No.17 of 2023

    இலங்கை மத்திய வங்கி, 2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின்; ஏற்பாடுகளுக்கமைய, நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி மீது 04.07.2025 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் தீர்வு நடவடிக்கைகளைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையானது, இலங்கை மத்திய வங்கியினால் பெரும்பாலான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி 2011 ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளை தொடர்ச்சியாக மீறி வந்ததனால் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சியின் அனைத்து சொத்துகள், தொழிற்பாடுகள்; மற்றும் விவகாரங்கள் மீதான முழுமையான கட்டுப்பாட்டைப் பொறுப்பேற்று, நிறுவனத்தின் பெயரிலும் அதன் சார்பிலும் அதன் வியாபார நடவடிக்கைகள் மற்றும் விவகாரங்களை முன்னெடுப்பதற்கு திரு. பி டபிள்யூ டி என் ஆர் ரொட்ரிகோ அவர்கள் அதே நாளில் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். 

Pages