• Clarification on the Auditors to Audit the Accounts of Licensed Banks in Sri Lanka

    தேசிய அபிவிருத்தி வங்கியின் உள்ளக மோசடி தொடர்பான வெளிப்படுத்தலைத் தொடர்ந்து, தேசிய அபிவிருத்தி வங்கியின் நிதியியல் கூற்றுக்களின் கணக்காய்வில் ஈடுபட்ட ஈடுபாட்டுப் பங்காளருக்கும் தர உறுதிப்பாட்டுப் பங்காளருக்கும் உரிமம்பெற்ற வங்கிகளினுடைய எந்தவொரு கணக்காய்வுப் பணிகளையும் ஒப்படைக்க வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி ஏனஸ்ட் அன்ட் யங், இலங்கை நிறுவனத்தினை வேண்டிக்கொண்டது.

  • CCPI-based headline inflation accelerated in October 2026

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை  (கொநுவிசு, 2021ஸ்ரீ100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2026 செத்தெம்பரின் 8.0 சதவீதத்திலிருந்து 2026 ஒத்தோபரில் 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு) 2026 செத்தெம்பரின் 8.7 சதவீதத்திலிருந்து 2026 ஒத்தோபரில் 8.8 சதவீதமாக அதிகரித்ததுடன் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு) அதே காலப்பகுதியின் 7.7 சதவீதத்திலிருந்து 8.0 சதவீதமாக அதிகரித்துள்ளது.  

  • External Sector Performance - September 2026

    வெளிநாட்டு நடைமுறைக் கணக்கானது 2026 ஓகத்தில் பதிவுசெய்யப்பட்ட மிகையினைத் தொடர்ந்து, 2026 செத்தெம்பரில் ஐ.அ.டொலர் 128 மில்லியன் கொண்ட பற்றாக்குறையொன்றினைப் பதிவுசெய்தது. இருப்பினும், தாழ்ந்தளவிலான வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்களின் உயர்ந்தளவிலான உட்பாய்ச்சல்கள் என்பன உயர்ந்தளவிலான முதலாந்தர வருமானப் பற்றாக்குறையினையும் பணிகள் கணக்கில் தாழ்ந்தளவிலான மிகையினையும் விஞ்சிக் காணப்பட்டமையினால் பற்றாக்குறையானது 2025 செத்தெம்பரிலும் பார்க்க தாழ்ந்தளவில் காணப்பட்டது. நடைமுறைக் கணக்கானது 2026இன் சனவரி தொடக்கம் செத்தெம்பர் வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 420 மில்லியன் கொண்ட ஒன்றுசேர்ந்த பற்றாக்குறையொன்றைப் பதிவுசெய்தது.

  • Sri Lanka PMI - Construction expanded in September 2026

    கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு, செத்தெம்பரில் 57.8 இனைப் பதிவுசெய்தது. புதிய கட்டடவாக்க கருத்திட்டங்களின் நிலையான போக்கொன்றினால் ஆதரவளிக்கப்பட்டு, கட்டடவாக்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியான வளர்ச்சியை இது எடுத்துக்காட்டுகின்றது. எனினும், தார் பற்றாக்குறையானது முக்கிய தடையாக விளங்கி, பல வீதி கட்டடவாக்க கருத்திட்டங்களில் தாமதத்தினை ஏற்படுத்தியது. 

  • Notice to General Public on Prohibited Pyramid Schemes - Max App Media Ltd.

    திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83இ பிரிவின் கீழ், இலங்கை மத்திய வங்கியானது விசாரணை மேற்கொண்டு “Max App Media Ltd மற்றும் அதனுடன் இணைந்த Max LK (Pvt) Ltd., Max Media Lanka (Pvt) Ltd.”என்பன தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டு, நடத்தி ஊக்குவித்துள்ளது என உறுதிசெய்து தீர்மானித்துள்ளது.

  • Central Bank of Sri Lanka Hosts 76th Anniversary Oration on “The Intelligent Central Bank: Building Trust in the Age of AI”

    இலங்கை மத்திய வங்கி அதன் 76 ஆவது ஆண்டுநிறைவுச் சொற்பொழிவு புகழ்பெற்ற தொழில்சார் நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நிதியியல் துறை பிரதிநிதிகள் போன்றோரின் பங்கேற்புடன் 2026 ஒத்தோபர் 23 அன்று மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. 

  • SL Purchasing Managers’ Index (PMI) – September 2026

    கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2026 செத்தெம்பரில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் ஆகிய இரண்டிலும் விரிவடைதல்களினை எடுத்துகாட்டுகின்றன.

    தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு) 2026 செத்தெம்பரில் 53.0 சுட்டெண் பெறுமதியொன்றினைப் பதிவுசெய்து. முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி காணப்படுகின்றது. தயாரிப்பு நடவடிக்கைகள் மாதகாலப்பகுதியில் அதையொத்த வேகத்தில் தொடர்ந்தும் விரிவடையுமென இது எடுத்துக்காட்டுகின்றது. 

  • The Central Bank of Sri Lanka Releases the Financial Stability Review for the Year 2026

    2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 70(1)இன் நியதிகளில் இலங்கை மத்திய வங்கி 2026ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதிப்பாட்டு மீளாய்வினை வெளியிட்டிருக்கின்றது. இச்சட்டரீதியான அறிக்கை, நிதியியல் முறைமையின் உறுதித்தன்மை மீதான கணிப்பீட்டுடன் தொடர்பான இடர்நேர்வுகள் மற்றும் பாதிக்கப்படும் தன்மைகள் என்பனவற்றை அடையாளம் கண்டு, மதிப்பீடு செய்வதோடு மத்திய வங்கி மற்றும் ஏனைய ஒழுங்குமுறைப்படுத்தல்  அதிகாரசபைகளினால் செயற்படுத்தப்பட்ட கொள்கை வழிமுறைகளையும் மேற்கோடிடுகிறது. இவ்வறிக்கைஇ பொதுவாக 2026ஆம் ஆண்டின் யூன் வரையான தரவுகளை உள்ளடக்குகின்றது. இவ்வெளியீட்டின் இலத்திரனியல் பதிப்பினை இலங்கை மத்திய வங்கியின் வலைத்தளத்தில் பார்வையிடமுடியும்.

  • The Central Bank of Sri Lanka Inaugurates The Financial Literacy Month – 2026

    இலங்கை மத்திய வங்கி, ராஜகிரியவிலுள்ள அதன் வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையத்தில் “FinLit Expo – Colombo” நிகழ்வை  தொடங்கி நிதியியல் அறிவு மாதம் - 2026 இனை அங்குரார்ப்பணம் செய்தது. நிதியியல் அறிவினை வலுப்படுத்தல், பொறுப்புமிக்க நிதியியல் நடத்தையினை ஊக்குவித்தல் மற்றும் நிதியியல் வசதிக்குட்படுத்தலை முன்னேற்றுதல் என்பவற்றுக்காக நாடளாவிய ரீதியல் பல வகையான ஈடுபாடுகளை இத்தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்றிணைக்கின்றது. தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கைக்கான நிதியியல் அறிவு வழிகாட்டலின் கீழ் பரந்த தேசிய முயற்சியின் பாகமாக நிதியியல் அறிவு மாதம் அமைகின்றது.

  • The Central Bank of Sri Lanka releases the Key Findings of the Systemic Risk Survey (SRS) – H2 of 2026

    2026 ஆம் ஆண்டின் இரண்டாமரைப்பகுதியில் நடாத்தப்பட்ட முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டில் முக்கியமாக கண்டறியப்பட்டவைகளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இது நிதியியல் முறைமை பற்றிய சந்தைப்பங்கேற்பாளர்களின் எண்ணப்பாங்கினையும் அவர்களது நம்பிக்கையினையும் பிரதிபலிக்கின்றது. இந்த அளவீடு 2026 யூலை 17 முதல் 2026 ஓகத்து 14 வரை நடாத்தப்பட்டது.

Pages