• Notice to General Public on Prohibited Pyramid Schemes

    திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83இ பிரிவின் கீழ், இலங்கை மத்திய வங்கியானது விசாரணை மேற்கொண்டு “ஐகெinவைல சுழஎநச (Pஎவ) டுவன” என்பன தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டு, நடத்தி ஊக்குவித்துள்ளது என உறுதிசெய்து தீர்மானித்துள்ளது.

    இதன்படி, பின்வரும்; நிறுவனங்கள்ஃசெயலிகள், திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83இ பிரிவின் கீழ் தடைசெய்யப்பட்ட திட்டங்களாக உறுதிசெய்யப்பட்டு  தீர்மானிக்கப்பட்டுள்ளன. 

  • CCPI-based headline inflation accelerated further in June 2026

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை  (கொநுவிசு, 2021=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2026 யூனில் மேலும் அதிகரித்தமையானது எதிர்பார்க்கப்பட்டவாறு மத்திய கிழக்கு யுத்தத்தின் காரணமாக உள்நாட்டு வலு விலைகளிற்கான தொடர்ச்சியான மேல்நோக்கிய சீராக்கங்களின் ஊடுகடத்தலினைப் பிரதிபலித்தது. இதற்கமைய, முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்காண்டு) 2026 மேயில் பதிவாகிய 5.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2026 யூனில் 6.8 சதவீதமாகப் பதிவுசெய்யப்பட்டது.

    உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு), 2026 மேயில் பதிவாகிய 7.8 சதவீதத்திலிருந்து 2026 யூனில் 8.4 சதவீதத்திற்கு அதிகரித்தமையானது முதன்மைப் பணவீக்கத்தின் அதிகரிப்பிற்கு முக்கியமாகப் பங்களித்தது. உணவுப் பணவீக்கமும் (ஆண்டிற்காண்டு) 2026 மேயில் பதிவாகிய 0.9 சதவீதத்திலிருந்து 2026 யூனில் 3.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

  • External Sector Performance - May 2026

    வெளிநாட்டுத் துறை செயலாற்றமானது மத்திய கிழக்கு யுத்தத்தின் தாக்கத்தினை தொடர்ச்சியாக பிரதிபலித்ததுடன், நடைமுறைக் கணக்கானது 2026 மேயில் இரண்டாவது தொடர்ச்சியான மாதத்திற்கான பற்றாக்குறையொன்றினைப் பதிவுசெய்தது.   

  • IMF Staff Concludes Visit to Sri Lanka

    திரு. இவான் பப்பாஜீயோர்ஜியு தலைமையிலான பன்னாட்டு நாணய நிதியத்தின்; பணிக்குழு அண்மைய பேரண்டப்பொருளாதார முன்னேற்றங்களை மதிப்பீடு செய்வதற்கும், பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தில் அதிகாரிகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுவதற்கும் யூன் 24 முதல் 30 வரையான காலப்பகுதியில் கொழும்புக்கு விஜயம் செய்தது. விஜயத்தின் இறுதியில், பன்னாட்டு நாணய நிதியமானது பின்வரும் ஊடக வெளியீட்டினை 2026 யூன் 30 அன்று வெளியிட்டதுடன், இதனைக் கீழேயுள்ள இணைப்பிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

  • Sri Lanka PMI - Construction expanded in May 2026

    கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண்னில் பிரதிபலிக்கப்பட்டவாறு 2026 மேயில் 59.1 இற்கு அதிகரித்தது. ஏப்பிறல் பண்டிகைக் காலத்தில்  எதிர்கொண்ட மெதுவடைதலொன்றைத் தொடர்ந்து மாதகாலப்பகுதியில் கட்டடவாக்க நடவடிக்கைகள் மீள்தொடங்கியமை பற்றி அநேகமான அளவீட்டு பதிலிறுப்பாளர்கள் அறிக்கையிட்டனர்.  

  • SL Purchasing Managers’ Index (PMI) – May 2026

    கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2026 மேயில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கை இரண்டிலும் மேம்படுதல்களை எடுத்துக்காட்டுகின்றன.

    தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2026 மேயில் 56.6 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, 2026 ஏப்பிறலுடன் ஒப்பிடுகையில் தயாரிப்பு நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றது. அனைத்து துணைச் சுட்டெண் பெறுமதிகளும் மாதகாலப்பகுதியில் நடுநிலையான அடிப்படை அளவிற்கு மேல் பதிவாகி, சுட்டெண் பெறுமதியில் ஒட்டுமொத்த அதிகரிப்பிற்குப் பங்களித்தன. எனினும், மத்திய கிழக்கு மோதலுடன் இணைந்த சவால்மிக்க தொழிற்படுகின்ற சூழல் பற்றி பதிலிறுப்பாளர்கள் தொடர்ந்தும் எடுத்துக்காட்டினர்.

  • Kasagala Green Plantation (Private) Limited: Statement made at the “Pini Viyana” TV Programme aired on ITN on 08.06.2026

    கசகல கிரீன் பிளான்டேஷன் (பிறைவேட்) லிமிடெட்டின் பணிப்பாளர் திரு. மல்வத்தகே ரஞ்சித் நந்தன பீரிஸ் இலங்கை சுயாதீனத் தொலைக்காட்சி சேவையின் “பினி வியன” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 2026.06.08 அன்று ஏனையவற்றுக்கு மத்தியில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார் என்பது இலங்கை மத்திய வங்கியின் அவதானத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது:

  • Cancellation of the Registration of Co-operative Leasing Company Limited as a Registered Finance Leasing Establishment under the Finance Leasing Act No. 56 of 2000

    திருத்தப்பட்டவாறான, 2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதிக் குத்தகைக்குவிடும் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நிதிக் குத்தகைக்குவிடும் நிறுவனமான கோப்பரேட்டிவ் லீசிங் கம்பனி லிமிடெட்,  2010ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க நிதிக் குத்தகைக்குவிடும் (அறிக்கையிடல் தேவைப்பாடுகள்) சட்டப் பணிப்புரையுடன் இணங்கியொழுகுவதற்கு மீண்டும் மீண்டும் தவறியதன் மூலம் இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பணிப்புரைகளுக்கு முரணாகச் செயற்பட்டுள்ளதுடன் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களினை ஒருங்கிணைப்பதற்கான முதன்மைத்திட்டம் தொடர்பாக இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட தேவைப்பாடுகளை நிறைவேற்றுதவற்கு பல கால நீடிப்புக்கள் வழங்கப்பட்டபோதிலும் கம்பனி தவறியிருந்தது. முதன்மைத் திட்டத்தைக் கடைப்பிடிப்பதற்கு கோப்பரேட்டிவ் லீசிங் கம்பனி லிமிடெட்டினால் திருப்திகரமான முன்னேற்றம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் குறிப்பாக, தமது வியாபாரத் தொழிற்பாடுகளின் நீடித்துநிலைத்திருக்கும் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான சாத்தியமான திட்டமொன்றை உருவாக்குவதற்கு கோப்பரேட்டிவ் லீசிங் கம்பனி லிமிடெட் தவறியுள்ளது. 

  • Financial Sector Performance in the First Quarter of 2026

    மத்திய கிழக்கில் காணப்படுகின்ற உயர்ந்தளவிலான பதற்றம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்றதன்மைகள் என்பவற்றிலிருந்து தோற்றம்பெறுகின்ற சவால்மிக்க உலகளாவிய மற்றும் உள்நாட்டு நிலைமைகள் என்பவற்றிற்கு மத்தியில் நிதியியல் முறைமையானது 2026இன் முதலாம் காலாண்டுப்பகுதியில் தாக்குப்பிடிக்குந்தன்மையுடன் தொடர்ந்தும் காணப்பட்டது. உலகளாவிய நிச்சயமற்றதன்மைகள் மற்றும் வெளிநாட்டுத் துறை அழுத்தங்கள் என்பன காணப்பட்ட போதிலும் உள்நாட்டுப் பேரண்டநிதியியல் நிலைமைகள் 2026இன் முதலாம் காலாண்டுப்பகுதியில் பரந்தளவில் ஆதரவாக தொடர்ந்தும் காணப்பட்டன. கொடுகடன் வளர்ச்சியானது காலப்பகுதியில் வலுவான தனியார் துறைக் கடன்வழங்கலினால் முக்கியமாக ஆதரவளிக்கப்பட்ட, வளர்ச்சியடைந்துவருகின்ற உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் நிதிக் கம்பனிகள் என்பவற்றினால் வழங்கப்பட்ட மொத்த கொடுகடனுடன் காலப்பகுதியில் மேலும் துரிதமடைந்தது. ஆதலால், கொடுகடன் வெளிப்படுத்துகைகள் தனியார் துறையினை நோக்கி அதிகரித்தளவில் நகர்வடைந்துள்ள வேளையில், அரசாங்க மற்றும் பொதுக் கூட்டுத்தாபனங்களிற்கான வெளிப்படுத்துகைகள் சிறிதளவு மிதமடைந்தன. அரசு மற்றும் வங்கித்தொழில் துறைகளிற்கிடையிலான நிலைபெற்ற இடையிணைப்புக்களானவை அரசு மற்றும் வங்கி இடைத்தொடர்புகளினால் தொடர்ந்தும் பிரதிபலிக்கப்பட்டது.

  • Central Bank of Sri Lanka to promote digital payments in Trincomalee

    இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஏனைய சிரேஷ்ட அலுவலர்களின் பங்கேற்புடன் 2026 யூன் 05 மற்றும் 06ஆம் திகதிகளில் இலங்கை மத்திய வங்கி திருகோணமலையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. அரசாங்க அலுவலர்கள், வர்த்தக சமூகம் அதேபோன்று பொதுமக்கள் மத்தியில் டிஜிட்டல் கொடுப்பனவு முறைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதனை இந்நிகழ்ச்சித்திட்டம் இலக்காகக் கொள்கின்றது. இந்நிகழ்ச்சித்திட்டம் வங்கிகள், வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் மற்றும் ஏனைய ஆர்வலர்களின் பங்கேற்புடன் திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கார் தரிப்பிட வளாகத்தில் மு.ப 9.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணி வரை இடம்பெறும். 

Pages