2018 திசெம்பரில் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100)   ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2018 நவெம்பரில் பதிவுசெய்யப்பட்ட 1.0 சதவீதத்திலிருந்து திசெம்பரில் 0.4 சதவீதத்திற்குக் குறைவடைந்தது. திசெம்பர் 2018இல் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கத்தில் அவதானிக்கப்பட்ட குறைவானது உணவு மற்றும் உணவல்லாத வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் விலைகளின் குறைவினால் உந்தப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு உணவுப் பணவீக்கம் 2018 நவெம்பரில் பதிவுசெய்யப்பட்ட -3.9 சதவீதத்திலிருந்து 2018 திசெம்பரில் -4.5 சதவீதத்திற்கு குறைவடைந்திருந்த வேளையில் ஆண்டுக்கு ஆண்டு உணவல்லாப் பணவீக்கமானது 2018 நவெம்பரின் 5.2 சதவீதத்திலிருந்து 2018 திசெம்பரில் 4.7 சதவீத்திற்கு குறைவடைந்தது. 

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் 2018 நவெம்பரின் 2.7 சதவீதத்திலிருந்து 2018 திசெம்பரில் 2.1 சதவீதத்திற்கு குறைவடைந்தது. 

மாதாந்த மாற்றங்களைக் கருத்திற்கொள்ளும் போது தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் -0.5 சதவீதமாக 2018 திசெம்பரில் காணப்பட்டது. இதற்கு பிரதானமாக உணவல்லா வகையிலுள்ள பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறைவடைந்திருந்தமை காரணமாவதோடு, இவ்வகையில் போக்குவரத்து துணை வகையானது (பெற்றோல், டீசல் மற்றும் பேருந்துக் கட்டணம்) உயர்ந்த அளவிலான குறைவினைப் பதிவுசெய்தது.

மேலும், தொடர்பூட்டல், வெறியக்குடிவகைகள் மற்றும் புகையிலை துணை வகைகளிலுள்ள பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மாதகாலப்பகுதியில் குறைவினைப் பதிவுசெய்தன. அதேவேளையில், உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகள் குறைவினைப் பதிவுசெய்ததோடு, இவ்வகையில் மரக்கறிகள், எலுமிச்சை, பெரிய வெங்காயம், வாழைப்பழம் மற்றும் தேங்காய்கள் ஒரு முக்கியமான குறைவினைப் பதிவுசெய்தன.

முழுவடிவம்

 

Published Date: 

Monday, January 21, 2019