நிதியியல் உளவறிதல் பிரிவு மூலம் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டு காலப்பகுதியின் போது நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவித்தலினை அமுல்படுத்துவதற்கு தண்டங்களை விதித்தல்

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2) பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டு, நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்காமைக்காக நிறுவனங்கள் மீது நிதியியல் ரீதியான தண்டங்கள் விதிக்கப்படலாம். நிதியியல் நிறுவனத்தின் அல்லது பெயர் குறிக்கப்பட்ட நிதிசாரா தொழிலின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் பாரதூரமான தன்மை என்பவற்றை பரிசீலனையில் கொண்டு தண்டங்கள் குறித்துரைக்கப்படலாம்.

அதற்கமைய, நாட்டில் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தலுக்கான ஒழுங்குமுறைப்படுத்துநர் என்ற ரீதியில் நிதியியல் உளவறிதல் பிரிவானது நிதியியல் நிறுவனங்கள் மீது இணங்குவித்தலினை அமுல்படுத்துவதற்கு 2019ஆம் ஆண்டிற்காக ரூ.5 மில்லியனையும் 2020 மே 31 வரை ரூ.1 மில்லியனையும் கொண்ட மொத்தத் தொகையான தண்டங்களை விதித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2020 யூலை 01 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் நாட்டில் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் இணங்குவிப்பு மட்டத்தினை மேம்படுத்தும் பொருட்டு நிதியியல் உளவறிதல் பிரிவின் மூலம் நிதியியல் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தண்டங்களை வெளியிடுவதற்கு தீர்மானித்தது. 

மூன்றாம் தரப்பினர் வைப்புகள், அரசியல் ரீதியாக முகம்கொடுக்கின்ற ஆட்களுக்கான அனுமதியினைப் பெற்றுக்கொள்ளல், தடைகளைப் பரிசோதித்தல் மற்றும் நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் கீழ் நிதியியல் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் தொடர்பில் 2016ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நிதியியல் நிறுவனங்களுக்கான விதிகளை (வாடிக்கையாளர் உரிய விழிப்புக் கவனம்) மீறியமைக்காகவே பிரதானமாக தண்டங்கள் விதிக்கப்பட்டிருந்தன. 

2019ஃ2020 காலப்பகுதியின் போது நிதியியல் உளவறிதல் பிரிவினால் விதிக்கப்பட்ட தண்டங்கள் பற்றிய விபரங்கள்:

திகதி நிறுவனம் தொகை (ரூ.)
2019 யூலை 29 இலங்கை வங்கி 3,000,000.00
2019 செத்தெம்பர் 3 நேஷன் ரஸ்ட் பாங்க் பிஎல்சி 1,000,000.00
2019 ஒத்தோபர் 24 கொமர்ஷல் கிரெடிட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி 1,000,000.00
2020 பெப்புருவரி 19 சர்வோதய டெவலெப்மன்ட் பினான்ஸ் லிமிடெட் 500,000.00
2020 மே 18 யுபி பினான்ஸ் கம்பனி லிமிடெட் 500,000.00

Published Date: 

Friday, July 24, 2020