இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2020 ஓகத்து

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2020 ஓகத்தில் விரிவடைந்தன. 

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு, நாட்டில் தொழில் நடவடிக்கைகள் இயல்புநிலைக்கு திரும்புவதிலிருந்து பயனடைந்து தயாரிப்பு நடவடிக்கைகள் 2020 ஓகத்தில் தொடர்ந்தும் மீட்சியடைந்தன. புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி துணைச் சுட்டெண்கள் 2020 ஓகத்தில் விரிவடையும் மட்டத்தில் காணப்பட்ட அதேவேளை தொழில்நிலை துணைச் சுட்டெண்ணில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டது. 

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது 2020 ஓகத்தில் 56.0 இனை அடைந்ததன் மூலம் பணிகள் துறையானது தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாகவும் தொடர்ந்தும் விரிவடைந்தது. பணிகள் துறை நடவடிக்கைகள்  உலகளாவிய நோய்த்தொற்றுக்கு முந்திய மட்டங்களுக்கு படிப்படியாக மீட்சியடைவதனை எடுத்துக்காட்டி 2020 யூலையுடன் ஒப்பிடுகையில் புதிய வியாபாரங்கள், வியாபார நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட விரிவடைதல்கள் மூலம் இது துணையளிக்கப்பட்டிருந்தது.

முழு வடிவம்

Published Date: 

Wednesday, September 16, 2020