புனைக்கதைகளை முன்வைத்தல்
1. மத்திய வங்கிக்கும் அரசாங்கத்திற்குமிடையில் ஒருங்கிணைப்பு எதுவும் கிடையாது?
நாணய மற்றும் அரசிறை அதிகாரிகளுக்குமிடையிலான ஒருங்கிணைப்பு அத்தியாவசியமானதாக விளங்குகின்றது. நியதிச்சட்ட ஒருங்கிணைப்புச் சபை ஒன்றினை நிறுவியதனூடாக இலங்கை மத்திய வங்கிச் சட்டம் இதனை உறுதிசெய்கின்றது. இலங்கை மத்திய வங்கியானது குறிப்பாக, நெருக்கடி முகாமைத்துவம் மற்றும் நிதியியல் முறைமை மேற்பார்வை துறைகளில் அரசாங்கம், பன்னாட்டு நிதியியல் நிறுவனங்கள் மற்றும் ஏனைய ஒழுங்குமுறைப்படுத்துநர்கள் என்பவற்றுடன் நெருக்கமாகப் பணியாற்றுகின்றது.
2. இலங்கை மத்திய வங்கி இறையாண்மைக்கு அப்பாற்பட்டது மற்றும் வெளிவாரி முகவராண்மைகளுக்கு மாத்திரம் பொறுப்புக்கூறுகின்றது?
பாராளுமன்றத்திற்கும் அத்துடன் இறுதியாக இலங்கை மக்களுக்குமான இலங்கை மத்திய வங்கியின் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு ஆற்றல்வாய்ந்த கட்டமைப்பு ஒன்றினை இலங்கை மத்திய வங்கிச் சட்டம் ஏற்பாடுசெய்கின்றது. பணவீக்க இலக்கினை நிர்ணயிப்பதற்காக நிதி அமைச்சு பொறுப்புடைமையினைப் பகிர்ந்துகொள்கின்றது. பன்னாட்டு நாணய நிதியம் போன்ற நிறுவனங்களுடன் சர்வதேச ரீதியான உறவுகளைப் பேணிவளர்ப்பதில் அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் இலங்கை மத்திய வங்கி பணியாற்றுகின்றது.
3. இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் சுயாதீனம் புதியதோர் எண்ணக்கருவா?
இலங்கை மத்திய வங்கியின் சுயாதீனம் முழுமையாகப் புதிய விடயமொன்றல்ல, ஆயினும், இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் அது குறிப்பிடத்தக்களவு வலுப்படுத்தப்பட்டுள்ளது. நாணய விதிச் சட்டத்தின் கீழும்கூட இலங்கை மத்திய வங்கிக்கு உயர்வானளவிலான நிதியியல் சுயாதீனம் உரித்தளிக்கப்பட்டிருந்தது
4. சுயாதீனம் எதிர் எதிர்பார்க்கைகள்: இலங்கை மத்திய வங்கி உண்மையில் நிறைவேற்றக்கூடியவை யாவை?
மையக் குறிக்கோள் உள்நாட்டு விலை உறுதிப்பாடு இனை அடைதலும் பேணுதலுமாகும். அத்துடன் நிதியியல் முறைமை நிலையுறுதி ஐப் பாதுகாத்தலும் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கமும் ஏனைய அதிகாரிகளும் வளர்ச்சியை நோக்காகக் கொண்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்தக்கூடிய இயலச்செய்கின்ற உறுதிப்பாட்டுச் சூழல் ஒன்றை உருவாக்குவதும் இலங்கை மத்திய வங்கியின் வகிபாகமாகும். இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் மூலம் பொறுப்பாணையளிக்கப்பட்ட தற்போதைய நெகிழ்ச்சிமிக்க பரிபாலனத்தின் கீழ் இலங்கை ரூபாவின் பெறுமதி சந்தை சக்திகள் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றது.
5. முகவர் பணிகளைக் கொண்டு நடாத்துவதில் மத்திய வங்கியின் வகிபாகம்?
இலங்கை மத்திய வங்கிக்கு அரசாங்கம் சார்பில் பல்வேறு முகவர் பணிகளை மேற்கொள்கின்ற பொறுப்பு பல்வேறு நியதிச்சட்டங்க;டாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நம்பிக்கை அதேபோன்று வேறு ஏற்றுக்கொள்ளத்தக்க நிறுவனசார் ஒழுங்கேற்பாடுகள் இல்லாமை காரணமாக இது உருவானது








