பொதுப் படுகடன் திணைக்களம் - வைப்பகம்

(2026 சனவரி 01 அன்று முதல் நடைமுறைக்கு வரும் விதத்தில் திணைக்களம் மூடப்பட்டது)

இலங்கை மத்திய வங்கியின் பொதுப் படுகடன் திணைக்களம் 2026 சனவரி 01 அன்று முதல் நடைமுறைக்கு வரும் விதத்தில் தொழிற்பாடுகளை நிறுத்தியது. பொதுப் படுகடன் முகாமைத்துவம், அரச பிணையங்கள் சந்தை, அரச பிணையங்கள் ஊடக அறிக்கைகள், பணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள், அறிவித்தல்கள் அதேபோன்று திணைக்களத்தினால் முன்னர் வெளியிடப்பட்ட இரண்டாந்தரச் சந்தை வர்த்தகத் தொகுப்பு மற்றும் நாளாந்த அறிக்கைகள் பற்றிய தகவல்களுக்கான ஒருங்கிணைந்த பெறுகை மையமாக இப்பக்கம் அமைகின்றது. கீழே வழங்கப்பட்டுள்ள அனைத்து இணைப்புக்களும் இலங்கை மத்திய வங்கியின் இணையத்தளத்திலுள்ள உரிய உத்தியோகபூர்வ பக்கங்களுக்கு பயனாளர்களை வழிப்படுத்தும்.

பொதுப் படுகடன் முகாமைத்துவம்

இலங்கை அரசாங்கத்தின் பொதுப் படுகடன் முகாமைத்துவ நடவடிக்கைகளுடன் தொடர்புடைய தகவல்களைப் பெறுதல்.  

அரச பிணையங்கள் சந்தை 

அரச பிணையங்களின் வழங்கல் மற்றும் வர்த்தகப்படுத்தலுடன் தொடர்புடைய தகவல்கள். 

ஊடக அறிக்கைகள் 

திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறி வழங்கல்கள் மற்றும் ஏலம் உள்ளடங்கலாக அரச பிணையங்களுடன் தொடர்புடையதாக வழங்கப்படும் ஊடக அறிக்கைகள். அரச பிணையங்கள் ஊடக அறிக்கைகளைப் பார்க்கவும்.

பணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்

அரச பிணையங்கள் மற்றும் பொதுப் படுகடன் முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட பணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்களை இப்பகுதி உள்ளடக்குகின்றது. இவ்ஆவணங்கள், அரச பிணையங்கள் சந்தையில் இணங்குவிப்பையும் தகவலறிந்த பங்கேற்பையும் உறுதிப்படுத்துவதற்கு உதவி, முதனிலை வணிகர்கள், நிதியியல் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய சந்தைப் பங்கேற்பாளர்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் தொழிற்பாடுசார்ந்த வழிகாட்டலையும் வழங்குகின்றன. பணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்களை அணுகவும்.

அறிவித்தல்கள்

திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறி என்பவற்றின் வழங்கல் மற்றும் ஏலம் என்பவற்றுடன் தொடர்புபட்ட அறிவித்தல்கள். 

இரண்டாந்தரச் சந்தை வர்த்தகத் தொகுப்பு

அரச பிணையங்களின் இரண்டாந்தரச் சந்தை வர்த்தகத்துடன் தொடர்புடைய தொகுப்புகளும் வரலாற்றுசார் தரவுகளும். 

நாளாந்த தொகுப்பு அறிக்கை 

நாளாந்த ஏலப் பெறுபேறுகள் மற்றும் இரண்டாந்தரச் சந்தை வர்த்தகங்கள் பற்றிய தொகுப்பொன்றை வழங்குதல். 

அத்தியாயமொன்றின் நிறைவு 

உத்தியோகபூர்வ அறிவித்தல் மற்றும் காணொளி உள்ளடங்கலாக பொதுப் படுகடன் திணைக்களத்தின் மூடுகையுடன் தொடர்புடைய விடயங்கள். 

31.12.2025 இலங்கை மத்திய வங்கியின் பொதுப் படுகடன் திணைக்களத்தின் மூடுகை 

காணொளி : பொதுப் படுகடன் திணைக்களம்: அத்தியாயமொன்றின் நிறைவு, மரபுரிமையின் தொடர்ச்சி