தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 யூனில் 6.1 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது. இதற்கு, 2020 யூனில் நிலவிய உயர்வான தள புள்ளிவிபரத் தாக்கம் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 மேயின் 10.3 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 9.8 சதவீதத்திற்கு குறைவடைந்ததுடன் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 மேயின் 2.5 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 2.9 சதவீதத்திற்கு அதிகரித்தது.
ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணும் 2021 யூனில் 5.4 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.