வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2024 மாச்சு

ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மேம்பாடொன்றினால் ஆதரவளிக்கப்பட்டு வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2024 மாச்சில் சுருக்கமடைந்ததுடன் (ஆண்டிற்காண்டு அடிப்படையில்) இது 2022 ஓகத்திலிருந்து பதிவுசெய்யப்பட்ட உயர்ந்தளவிலான வருவாய்களாகக் காணப்பட்டது.

பணிகள் துறையும் சுற்றுலாத் துறையினால் முக்கியமாகப் பங்களிக்கப்பட்டு 2024 மாச்சில் குறிப்பிடத்தக்க தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த அதேவேளையில் கடல் போக்குவரத்து (சரக்கு) பணிகள் நியதிகளிலும் கணிசமானளவிலான உட்பாய்ச்சல்கள் பதிவுசெய்யப்பட்டன.

பருவகாலப் போக்குடன் இசைந்து செல்லும் விதத்தில் தொழிலாளர் பணவனுப்பல்கள்; 2024 மாச்சில் தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்பட்டன.

கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை மற்றும் அரச பிணையங்கள் சந்தை என்பவற்றில் வெளிநாட்டு முதலீடுகள் 2024 மாச்சில் மாதாந்த தேறிய வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன.

மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2024 மாச்சு இறுதியளவில் ஐ.அ.டொலர் 5.0 பில்லியனாக விளங்கியதுடன் இது 2023 இறுதியிலுள்ளவாறான ஐ.அ.டொலர் 4.4 பில்லியனுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பொன்றாகக் காணப்பட்டது.

இலங்கை ரூபாவானது 2024 மாச்சு மாத காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க டொலரிற்கெதிரான குறிப்பிடத்தக்களவில் உயர்வடைந்து செல்கின்ற போக்கொன்றினை எடுத்துக்காட்டியது.

முழுவடிவம்

Published Date: 

Tuesday, April 30, 2024