தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2021 சனவரியில் வீழ்ச்சியடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 திசெம்பரின் 4.6 சதவீதத்திலிருந்து 2021 சனவரியில் 3.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு, 2020 சனவரியில் நிலவிய உயர்வான தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கம் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 திசெம்பரின் 7.5 சதவீதத்திலிருந்து 2021 சனவரியில் 5.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மேலும், உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 திசெம்பரின் 2.2 சதவீதத்திலிருந்து 2021 சனவரியில் 1.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

முழு வடிவம்

Published Date: 

Monday, February 22, 2021