கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2020 யூனில் மேலும் வீழ்ச்சியடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)   ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 மேயில் 4.0 சதவீதத்திலிருந்து 2020 யூனில் 3.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இது பிரத்தியேகமாக 2019 யூனில் காணப்பட்ட உயர்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கத்தினாலேயே உந்தப்பட்டிருந்தது. உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 மேயில் 9.9 சதவீதத்திலிருந்து 2020 யூனில் 10.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை, உணவல்லா பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2020 மேயில் 1.6 சதவீதத்திலிருந்து 2020 யூனில் 1.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.   

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாற்றமானது 2020 யூனில் 4.7 சதவீதத்தில் மாறாதிருந்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது முக்கியமாக உணவு வகையிலுள்ள  பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புகளின் காரணமாக 0.8 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. உணவு வகையினுள், காய்கறிகள் மற்றும் மீன் என்பனவற்றின் விலைகள் 2020 யூனில் அதிகரிப்புகளைப் பதிவுசெய்தன. எவ்வாறாயினும், மாதகாலப்பகுதியில் தேங்காய் விலை, குறிப்பிடத்தக்க வீழ்ச்சியொன்றினைப் பதிவுசெய்தமை குறிப்பிடத்தக்கவொன்றாகும். இதேவேளையில், 2020 யூனில் உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகள் சிறிய அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன.

பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 மேயில் 2.9 சதவீதத்திலிருந்து 2020 யூனில் 3.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கமானது 2020 மேயில் 4.4 சதவீதத்திலிருந்து 2020 யூனில் 4.2 சதவீதம் கொண்ட அதன் பதின்மூன்று மாதங்களில் தாழ்ந்த அளவிற்கு மேலும் வீழ்ச்சியடைந்தது.

முழுவடிவம்

Published Date: 

Tuesday, June 30, 2020