இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது

2020 ஏப்பிறல் 03 அன்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2020 ஏப்பிறல் 03 அன்று வியாபாரம் முடிவுறுத்தப்பட்டதிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் 25 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 6.00 சதவீதத்திற்கும் 7.00 சதவீதத்திற்கும் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானமானது, சந்தை நிலைமைகளை இலகுபடுத்துவதற்கு இதுவரையில் எடுக்கப்பட்ட வழிமுறைகளை பூரணப்படுத்துவதுடன், கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய்த்தொற்றுப் பரவலின் வெளித்தாக்கத்தினாலும் நாட்டிற்குள் அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படுகின்ற கட்டுப்பாடுகளினாலும் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனியாட்களுக்கு மேலதிக நிவாரணங்களை வழங்குவதற்கு உள்நாட்டு நிதியியல் சந்தையினை இயலுமைப்படுத்தும்.
 
குறிப்பு: அட்டவணைப்படுத்தப்பட்டவாறு 2020 ஏப்பிறல் 09 அன்று எவ்வித நாணயக் கொள்கை அறிவிப்பும் காணப்படாது. எவ்வாறாயினும், நாணயச் சபையானது இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை மீளாய்வுக்குட்படுத்தக்கூடும் எனவும் பொருளாதார மற்றும் சந்தை அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டு தேவைப்படுமிடத்து அவசியமான மாற்றங்களையும் மேற்கொள்ளும்.
 

Published Date: 

Friday, April 3, 2020