2019 மேயில் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)'  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 ஏப்பிறலின் 3.6 சதவீதத்திலிருந்து 2019 மேயில் 3.5 சதவீதத்திற்கு குறைவடைந்தமைக்கு முன்னைய ஆண்டின் தொடர்பான மாதத்தில் காணப்பட்ட உயர்ந்த தளமே காரணமாகும். இதேவேளையில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் உணவு மற்றும் உணவல்லாப் பணவீக்கம் 2019 மேயில் முறையே -0.4 சதவீதம் மற்றும் 6.7 சதவீதமாக பதிவாகியது.  

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2019 ஏப்பிறலின் 1.9 சதவீதத்திலிருந்து 2019 மேயில் 2.0 சதவீதத்திற்கு சிறிதளவாக அதிகரித்தது. 

மாதாந்த மாற்றங்களைக் கருத்திற்கொள்ளும் போது, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணானது 2019 மேயில் 1.1 சதவீதத்தினால் அதிகரித்;தது. இதற்கு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலும் அவதானிக்கப்பட்ட பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்புக்களே காரணமாக அமைந்தன. உணவு வகையில் காய்கறிகள், உடன்மீன், எலுமிச்சம்பழங்கள், உருளைக்கிழங்கு மற்றும் பால்மா என்பனவற்றின் விலைகள் அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன. இதற்கு மேலதிகமாக, உணவல்லா வகையில், போக்குவரத்து; நலம்; பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம் ஆகிய துணை வகைகளிலுள்ள பொருட்களின் விலைகள் மாத காலப்பகுதியில் அதிகரித்தன.

முழுவடிவம்

Published Date: 

Friday, June 21, 2019