கே எம் எம் சிறிவர்த்தன

திறைசோிக்கான செயலாளா்

இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநா் திரு கே எம் எம் சிறிவர்த்தன திறைசோிக்கான செயலாளராக மத்திய வங்கியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா். இவா் மத்திய வங்கியில் 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சேவையினைக் கொண்டுள்ளாா். துணை ஆளுநராக அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர் திரு. சிறிவர்த்தன இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் மற்றும் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகிய முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

2017 யூலையிலிருந்து 2019 ஒத்தோபர் வரையான காலப்பகுதியில் திரு. சிறிவர்த்தன இந்தியா, இலங்கை, வங்காளதேசம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கான மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராக பன்னாட்டு நாணய நிதியத்திற்கு விடுவிக்கப்பட்டிருந்தார்.

இறைக் கொள்கைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் அத்துடன் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் மேலதிகப் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றுவதற்காக நிதி அமைச்சிற்கு 2010 ஒத்தோபரிலிருந்து 2015 ஏப்பிறல் வரையான காலப்பகுதியில்  இவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

திரு. சிறிவர்த்தன இலங்கை வங்கி, கொமர்ஷல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை துறைமுக அதிகார சபை, இலங்கை முதலீட்டுச் சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, இலங்கை ஏற்றுமதி கொடுகடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம், இலங்கை தொழில்பயிற்சி அதிகார சபை என்பன உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிலும் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும்/ திறைசேரியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

இவர் டிப்ளோமாவினையும் ஐக்கிய அமெரிக்காவின் வன்டர்பில்ட் பல்கலைக்கழகத்திலிருந்து (Vanderbilt University) பொருளாதாரத்தில் முதுமானிப் பட்டத்தினையும் பொருளாதார அபிவிருத்தியில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமாவினையும் களனி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளமானி (விசேட) பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார். திரு சிறிவர்த்தன பேரண்டப் பொருளாதார முகாமைத்துவம், பேரண்ட பொருளாதார நிர்ணயங்கள் மற்றும் எதிர்றல், பொதுப்படுகடன் கொள்கை, மத்திய வங்கித்தொழில், அரசாங்க நிதி முகாமைத்துவம், அரசாங்க நிதி, நாணயக் கொள்கை, நிதியியல் நிகழ்ச்சித்திட்டமிடல் மற்றம் கொள்கைகள் போன்ற துறைகளில் பல எண்ணிக்கையான பன்னாட்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் பங்கேற்றுள்ளார். இவர் பல கட்டுரைகளை தென்கிழக்காசிய மத்திய வங்கிகளின் ஆராய்ச்சிக் கற்கைகளிலும் இலங்கை மத்திய வங்கியின் உயர் அலுவலர் ஆய்வுகளிலும் வெளியிட்டிருக்கிறார்.