நாணயச் சபை

மத்திய வங்கி ஒரு தனித்தன்மை வாய்ந்த சட்ட அமைப்பாகும். இதில் மத்திய வங்கி ஒரு கூட்டிணைக்கப்பட்ட நிறுவனமல்ல. நாணயச் சட்ட விதியின் நியதிகளில், நாணயச் சபைக்கு கம்பனித் தகுதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் எல்லா அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகள் என்பன ஒப்படைக்கப்பட்டுள்ளன. நாணயச் சபை ஓர் ஆளுகை நிறுவனமாக இருப்பதினால், மத்திய வங்கியின் முகாமைத்துவம், செயற்பாடு மற்றும் நிர்வாகம் தொடர்பாக மேற்கொள்ளும் சகல கொள்கைத் தீர்மானங்களுக்கும் நாணயச்சபை பொறுப்பாகவுள்ளது. 

மத்திய வங்கியின் நாணயச்சபை ஐந்து (5) அங்கத்தவர்களைக் கொண்டுள்ளது.

ஆளுநர்

நிதியமைச்சின் செயலாளர் (பதவி வழி அலுவலர்)

மூன்று (3) நிறைவேற்று அலுவலர் அல்லாத அங்கத்தவர்கள் 

ஆளுநர், நாணயச் சபையின் தலைவராவார். இத்தோடு மத்திய வங்கியின் முதன்மை நிறைவேற்று அலுவலராகவும் தொழிற்படுகிறார். ஆளுநரும் நிறைவேற்று தரமில்லாத அங்கத்தவர்களும், நிதியமைச்சரின் விதந்துரைப்பின் அடிப்படையில் சனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றனர். நிறைவேற்று தரமல்லா சபை அங்கத்தவர்களின் நியமனத்திற்கு அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரமும் தேவைப்படுகிறது. ஆளுநரதும், நிறைவேற்று உத்தியோகத்தரல்லாத சபை அங்கத்தவர்களினதும் அலுவலகக் காலம் ஆறு (6) ஆண்டுகளாகும். நாணயச் சபையின் கூட்டம் நடத்தத் தேவையான ஆகக் குறைந்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை மூன்று (3) உறுப்பினர்களாகும். நாணயச் சபையின் தீர்மானங்கள் செல்லுபடியாவதற்கு மூன்று (3) அங்கத்தவர்களின் அங்கீகாரம் தேவையானதாகும். எவ்வாறாயினும், ஏகமனதான தீர்;மானம் எடுக்கப்படும் தேவை ஏற்படுமிடத்து சகல ஐந்து (5) அங்கத்தவர்களின் ஒருங்கிணைந்த அங்கீகாரமும் அத்தியாவசியமாகும்.

நாணயச் சபை உறுப்பினர்கள்

 

 

 

பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன்

ஆளுநர்

நாணயச் சபையின் தலைவர்

திரு. எஸ்.ஆர். ஆட்டிகல

திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்

பதவி வழி அலுவலர்

 

 

 

திரு. சஞ்சீவ ஜயவா்த்தன, சனாதிபதி சட்டத்தரணி

நியமன உறுப்பினர்

 

முனைவர். (திருமதி) ராணி ஜயமகா

நியமன உறுப்பினர்

திரு. சமந்த குமாரசிங்க

நியமன உறுப்பினர்